அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது சாமானிய மக்களின் சமையலறை; ஏற்கெனவே 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 993 ரூபாய் என வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு ஆட்டம் காண வைத்த நிலையில், இப்போது குறுகிய காலத் தேவைக்காகவும், ஏழை எளிய மக்களின் புகலிடமாகவும் இருந்த 5 கிலோ சிறிய வகை சிலிண்டர் விலையும் இன்று ஒரே நாளில் 261 ரூபாய் என அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவசரத் தேவைக்காக இந்தச் சிறிய சிலிண்டரை நம்பியிருந்த நடுத்தரக் குடும்பங்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் இந்த விலை உயர்வு ஒரு தீராத சுமையாக மாறி, “இனி அடுப்பு எரியுமா?” என்ற மிரட்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விலையேற்றத்தின் இந்த ராட்சதப் பாய்ச்சல் எங்கே போய் முடியுமோ என்ற கலக்கத்தில் இருக்கும் மக்களுக்கு, இன்றைய இந்த அறிவிப்பு ஒரு பேரிடியாகவே வந்து இறங்கியுள்ளது.
