Monday, March 2, 2026
Homeஉலகம்நாளை சந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை முழு விவரம்.. முக்கியக் குறிப்புகள்!

நாளை சந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை முழு விவரம்.. முக்கியக் குறிப்புகள்!

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் வருகிற மார்ச் 3ஆம் தேதி (நாளை) நிகழ உள்ளது.

பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்த கிரகணத்தின்போது சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ரத்த நிலவு (Blood moon) என்று அழைக்கப்படுகின்றது.

முழு கிரகண நிலை சுமார் 58 நிமிடங்கள் நீடிக்கும். இது இந்திய நேரப்படி மாலையில் நிகழ்கிறது.

இந்தியாவில் சந்திரன் உதிக்கும் போதே கிரகணம் தொடங்கிவிடுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தின் இறுதி நிலையை மட்டுமே காண முடியும்.

மாலை 4:58 மணிக்கு தொடங்கும் நிழல் கிரகணம் முழு கிரகணமாக மாறும். மாலை 5:32 க்கு முழு கிரகணம் முடிவுக்கு வரும். இரவு 7:53 மணிக்கு கிரகணம் முழுவதுமாக முடிவுக்கு வரும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சந்திரன் உதிக்கும் போது இந்த நிகழ்வு கிழக்கு அடிவானத்தில் தாழ்வாக தெரியும்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள திப்ருகார், திஸ்பூர், கௌவ்ஹாத்தி, ஷில்லாங், இட்டாநகர் உள்ளிட்ட சில நகரங்களில் முழு கிரகணத்தையும் காண முடியும்.

இங்கு மாலை 5:10 முதல் 5:25 மணிக்குள் கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையைத் தெளிவாகக் காணலாம்.

சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்குச் சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை என்றும் கூறப்படுகின்றது.

சந்திர கிரகணம் குறித்து முக்கிய விவரங்கள்:

விஸ்வாவஸு ஆண்டு/Viswavasu Year

சந்திர க்ரஹணம் /Lunar Eclipse

செவ்வாய்க்கிழமை

மாசி / Masi 19 / 03-March-2026

சில முக்கியக் குறிப்புகள்:

1) க்ரஹண காலம்

  • ஸ்பர்சம் – பிற்பகல் 3.20 மணி
  • மத்யமம் – மாலை 5.05 மணி
  • மோட்சம் – இரவு 6.47 மணி /

2 ) உணவுக்கட்டுப்பாடுகள்

காலை 10 மணிக்குள் போஜனம் செய்துவிடவும்.  காலை 10 மணிக்குப் பின்பு உணவு உண்பது தவிர்க்கப்பட வேண்டியது. 

இருப்பினும்,உடல் உபாதைகள் உள்ளவர்கள் அவரவர்கள் மருத்துவத் தேவைப்படி உண்பது அவசியம். 

3 ) தர்ப்பணம்

மாலை 5.30 மணியளவில் தீர்த்தமாடிவீட்டுத் தர்ப்பணம் செய்யத் தயாராகவும்

தர்ப்பணம் செய்வதற்கான நேரம் – இரவு 6.00 மணி முதல் இரவு 6.47 மணி  வரை மட்டுமே

  • சில காரணங்களால் மேலே குறிப்பிட்ட நேரத்தில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், “க்ரஹணம் விட்ட பின்போ, மறுநாள் காலையோ க்ரஹண தர்ப்பணம் செய்யக்கூடாது” .

4) தர்ப்பணம் செய்பவர்கள், தர்ப்பணம் இல்லாதவர்கள், பெண்கள் ஆகியோர் அனைவரும் க்ரஹண காலம் முடிந்த பின்பு, அதாவது, இரவு 6.47 மணிக்கு ஸ்நானம் செய்யவேண்டியது அவசியம்

5) க்ரஹண தர்ப்பணம் அன்று பலகாரம் செயய்வேண்டிய அவசியம் இல்லை எனினும், தர்ப்பணம் செய்தவர்கள் சாதம் உண்பது தவிர்ப்பது நல்லது. டிபன் வகைகள் (வெங்காயம், பூண்டு இன்றி) உண்ணலாம்

6) முக்கிய விண்ணப்பம்

இவற்றில் மாற்றுக்கருத்தோ, ஆட்சேபணமோ இருப்பின், அவரவர் வீட்டுப் பெரியோர்களிடமோ அல்லது குடும்ப ப்ரஹஸ்பதியிடமோ (வாத்யார் ஸ்வாமி) கேட்டு அதன்படி அனுஷ்டிக்கவும்.  சர்ச்சைகள் தவிர்க்கப்படுதல் நலம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments