Home Uncategorized மாசி மகம் கோவில்களில், தீர்த்தவாரி உற்சவம்

மாசி மகம் கோவில்களில், தீர்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள, பல கோவில்களில், தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்து வருது. உற்சவர்கள், கடலில் நீராடி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

மாசி மாத பவுர்ணமியுடன், மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள், மாசி மகம் எனப்படும். ஹிந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகை, இன்று விமரிசையாக அரங்கேறி உள்ளது.

மாசி மகத்தை, கடலாடும் நாள், தீர்த்த மாடும் நாள் என, அழைப்பர். மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இன்னிக்கு அதிகாலை, 5:30 மணிக்கு, உற்சவர் பார்த்த சாரதி பெருமாள், கருடவாகனத்தில், சக்ரத்தாழ்வாருடன், மெரினா கடற்கரையில் எழுந்தருளினார்.அங்கு தீர்த்தமாடும் நிகழ்ச்சி முடித்து, கோவில் திரும்பினார்.

இதில்,ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை தரிசித்தனர்.

Exit mobile version