மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி (CEO) சத்யா நாதெல்லாவின் (Satya Nadella) மகன் ஜைன் நாதெல்லா (Zain Nadella) நேற்று காலமானார். அவருக்கு வயது 26. மரணமடைந்த ஜெயின் பெருமூளை வாதம் என்னும் குறைபாடு இருந்தது. பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படும் பெருமூளை வாதம் அல்லது பெருமூளை முடக்கு நோயினால் பாதிப்படைந்தவரால் பொதுவாக நிற்கவோ நடக்கவோ இயலாது.
சாஃப்ட்வேர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜெயின் இறந்துவிட்ட தகவல் குறிப்பிடப்பட்டு. ” இறந்தவரது குடும்பத்தை மன தைரியம் அளிக்க பிரார்த்தனை செய்யவும். அதே நேரத்தில் பாதிக்கபட்டவர் தனிமையில் துக்கத்தை அனுபவிக்கும் வகையில், அவரது தனிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
