Home Uncategorized மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு கிறிஸ்துவ பேராசியர்கள் அதிரடி கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு கிறிஸ்துவ பேராசியர்கள் அதிரடி கைது

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று புகழ்பெற்ற பாளையங்கோட்டையில் உள்ள கல்வி நிறுவனங்கள் இன்று அந்தப் பெயரை சிதைத்து சின்னா பின்னமாக்கி கொண்டிருக்கின்றன.

பாளையங்கோட்டையில் சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி, இதே பெயரில் மேல்நிலைப் பள்ளிகள் எல்லாமே ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அருகருகே உள்ளன.

இந்த நான்கு நிறுவனங்கள் மற்றும் சாராள் டக்கர் கல்லூரி பள்ளி ஆகியவற்றின் தன்னிகரற்ற செயல்பாடுகளால் தான் பாளையங்கோட்டைக்கு  தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்ற பெயர் கிடைத்தது. கடந்த வாரம் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை தகாத உறவுக்கு அழைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அந்த சூடு ஆறும் முன் சேவியர் கல்லூரியில் மாணவிக்கு தொல்லை கொடுத்த இரண்டு *பேராசிரியர்கள்* சிக்கி இருக்கிறார்கள் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின் (40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(40) ஆகியோர் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த நான்காம் தேதி இவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள விடுதி ஒன்றில் மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேற பால்ராஜ் தன்னிடம் படிக்கும் முதுகலை வகுப்பு மாணவி ஒருவருக்கு செல்போனில் அழைப்பு விடுத்து அருவருக்கத் தக்க வார்த்தைகளை பேசி இருக்கிறார்.

ஜெபஸ்டின் ஒரு படி மேலே போய் நாங்கள் இருவரும் தண்ணி அடித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் வா என்று அழைத்திருக்கிறார். பேராசிரியர்களின் தொல்லை தாங்காமல் மாணவி போலீசில் புகார் செய்திருக்கிறார் பின்னர் ஏதோ நிர்பந்தம் காரணமாக மறுநாள் தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்டார்.

மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் சென்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து வேலை மிச்சம் என்று கருதியை போலீசார் மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவல்களை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே, உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் நேரடி கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய இருவரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது உறுதியானது.

நேற்று நள்ளிரவு தூத்துக்குடியில் தனது வீட்டில் தங்கி இருந்த ஜெபஸ்டினை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்து பேராசிரியர் பால்ராஜ் எஸ்கேப்.

பாளையங்கோட்டை போலீசார் இரு பேராசிரியர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியர சமூகம் வெட்கி தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

Exit mobile version