Home Uncategorized ‘மார்க் ஆண்டனி’ இந்தி சென்சார் சான்றிதழ் விவகாரம்

‘மார்க் ஆண்டனி’ இந்தி சென்சார் சான்றிதழ் விவகாரம்

‘மார்க் ஆண்டனி’ இந்தி சென்சார் சான்றிதழ் விவகாரம் – நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் சிபிஐ விசாரணை நிறைவு Exclusive தகவல்கள்…

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்தியிலும் வெளியிட திட்டமிட்டு இருந்த படக்குழு சென்சார் சான்றிதழ் பெற மும்பையில் உள்ள சென்சார் போர்ட் அலுவலகத்தை அனுகியது.

ஆனால் படக்குழு எதிர்பார்த்தது போல் அவ்வளவு எளிதில் சென்சார் சான்றிதழ் கிடைக்க அங்கு வழி வகை இல்லாத சூழ்நிலையே நிலவியது அதுமட்டுமின்றி சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டு மெர்லின் மேனகா என்பவர் மூலம் படக்குழுவை சென்சார் போர்ட் நிர்வாகிகள்  அனுகியுள்ளனர், இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்று அலோசனை செய்தபோது இனி தமிழ் சினிமா மட்டுமின்றி எந்த சினிமாவிற்கு இப்படி நிகழக்கூடாது என்றும் அதற்கு தக்க ஆதாரத்துடன் இந்த கும்பல் பற்றிய தகவல்களை பொதுவெளியில் தெரியபடுத்த வேண்டும் என்று முடிவு செய்து நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மூலம் இடைத்தரகர் மெர்லின் மேனகாவிடம் தொலைப்பேசி வாயிலாக தொடர்புக்கொண்டு பணத்தையும் அவர்கள் குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு அனுப்பி ஆதாரங்களை சேகரித்த பின் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலமாக பகிரங்கப்படுத்தியது இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இதனைத்தொடர்ந்து மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களும் இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார், அதனைத் தொடர்ந்து சிபிஐ இவ்வழக்கை பதிவு செய்து விசாரிக்க நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் தொடர்பு கொண்டு மும்பைக்கு நேரில் வந்து புகார் கொடுத்து விளக்கம் தரும் படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு தினங்களாக ஹரி கிருஷ்ணன் முன்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்த பின் விளக்கமும் அளித்துள்ளார்.

இதனிடையே இடைத்தரகர் மேனகா மற்றும் இரண்டு மும்பை சென்சார் போர்ட் அதிகாரிகளையும் நேரில் ஆஜராக உத்தரவிட்ட சிபிஐ அவர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளது.விசாரணை நிறைவு செய்த ஹரி கிருஷ்ணன் நாளை சென்னை திரும்ப உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Exit mobile version