Home Uncategorized லியோ படத்தில் ஆக்ட் & ஒர்க் செய்தோர் வாங்கிய  சம்பள விவரமாமிது ?

லியோ படத்தில் ஆக்ட் & ஒர்க் செய்தோர் வாங்கிய  சம்பள விவரமாமிது ?

விஜய்

லியோ படத்தில் நடிக்க நடிகர் விஜய் 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இதற்கு முன்பு ஒரு படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் லியோ படத்திற்காக 130 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் 130 கோடி சம்பளம் வாங்கியதை லியோ படத்தில் வசனம் எழுதிய ரத்னகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

த்ரிஷா

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் த்ரிஷா கமிட் ஆனார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அவர் மொத்தமாக 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சஞ்சய் தத் 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தில் நடிப்பதற்கு முன்பு கேஜிஎப் 2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு சம்பளம் 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அர்ஜுன்

வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழக்கூடியவர் நடிகர் அர்ஜுன். இவர் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அர்ஜுன் சம்பளமாக 2 கோடி ரூபாய் வாங்கியுள்ளாராம்.

பிரியா ஆனந்த் 

பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த நடிகை ப்ரியா ஆனந்திற்கு ஜாக்பார்ட் அடிக்கும் வகையில், லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளமாக 1 கோடி 50 லட்சம் வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனிருத்

சமீபகாலமாக அனிருத் இசையில் வெளியாகும் படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகி அவருடைய இசையும் பேசப்பட்டு வருகிறது. அதைப்போலவே இந்த லியோ படத்திலும் அவருடைய இசை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக சம்பளமாக அனிருத் 10 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version