Thursday, July 30, 2026
Homeசெய்திகள்பெண்கள் பாதுகாப்பு: டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெண்கள் பாதுகாப்பு: டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காவல்துறையினரால் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவருக்கு (டி.ஜி.பி.) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் இரு காவலர்களால் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அதிரடிப் படையைச் சீராகச் செயல்படுத்தவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முன்னேற்றங்கள் குறித்த விரிவான அறிக்கையை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்யவும் டிஜிபி-க்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், விசாரணையை 2 மாதங்களுக்குள் விரைந்து முடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனுக்குடன் நீதி கிடைப்பதை அனைத்துக் கீழ்மை நீதிமன்றங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments