தெரு நாய் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய்க்கடி சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதும், இதில் பெரும்பாலும் குழந்தைகளே கடுமையாகப் பாதிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெரு நாய் பிரச்சனையைத் தடுக்க அரசு நிர்வாகம் சார்பில் இதுவரை காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

