Home செய்திகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஜனவரி 1 முதல் முழுமையாக செயல்படும் – உயர் நீதிமன்றத்தில்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஜனவரி 1 முதல் முழுமையாக செயல்படும் – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்த வழக்கு விசாரணையின் போது, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, விரிவான திட்ட அறிக்கை மற்றும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவமனை கட்டடங்கள், நவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவுதல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான உட்கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்துப் பணிகளும் பூர்த்தியடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக மக்களின் பல ஆண்டு கால எதிர்பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கத் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது தென் மாவட்ட மக்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version