Home Uncategorized மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை – அமைச்சர் கே.என்.நேரு.

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை – அமைச்சர் கே.என்.நேரு.

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மர நடை பாதை அமைக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு.

சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்; தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை.

சென்னையில் ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். 

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.261 கோடி மதிப்பில் கூட்டுத் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

ரூ.302.5 கோடியில் 24 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

ரூ.98 கோடியில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மேம்பாலம் அமைக்கப்படும்.

சென்னை, மதுரை, கோவையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.

Exit mobile version