Thursday, April 30, 2026
HomeUncategorizedமீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டுகள் விநியோகம்

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டுகள் விநியோகம்

நாளை மறுநாள் நடைபெற உள்ள மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதை பெறுவதற்கான விதிமுறைகள் பின்வருமாறு; 8ம் தேதி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

ரூ.200 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 3000 பேரும், ரூ.500 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 2000-க்கும் மேற்பட்டோருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் புக் செய்த பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கட்டண பாஸ் வழங்கப்படுகிறது சிறப்பு கட்டண சீட்டு பெற மதுரை மேல சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments