சூர்யா, லைலா மற்றும் திரிஷா ஆகியோரது நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர். பருத்தி வீரன், ராம் என ஏராளமான படங்களை தந்து சிறந்த இயக்குநர் என்ற இடத்தை பெற்றார்.
மேலும், பல்வேறு படங்களில் நடிகராகவும் வெற்றிப்பெற்றார். இவர் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் முக்கியமான வில்லனாக நடித்தார், இயக்குநர் அமீர். தனுஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராதாரவி ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம் மெகாஹிட் அடித்தது.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் அமீர் இணையும் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை இயக்குநர் அமீர் இயக்க, வெற்றிமாறன் படத்தின் வசனங்களை எழுதவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
