Friday, March 20, 2026
HomeUncategorizedமழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை- அரசு அறிவிப்பு

மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை- அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் 1 ம் வகுப்பு முதல் 8 வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகிறது. 9 முதல் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மழலையர்கள் பள்ளிகளும் நவம்பர் 1-ந்தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. 
 
ஆனால், தற்போது தமிழ்நாட்டில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போது திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும், மழலையர் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments