Home Uncategorized மணிப்பூரில் 5 நாட்கள் இணையசேவை முடக்கம்

மணிப்பூரில் 5 நாட்கள் இணையசேவை முடக்கம்

மணிப்பூர் மாநிலத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மொபைல் இணைய சேவைக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அம்மாநிலத்தின் உள்துறை சிறப்பு செயலாளர் கியான் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூர் பகுதியில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு வேன் தீ வைக்கப்பட்டது. இதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். 

இதனால் அப்பகுதியில் ஜாதிக் கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வன்முறையைத் தடுப்பதற்காக பிஷ்ணுபூரில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நகரின் பல பகுதிகளில் 5 நாட்களுக்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version