Home Uncategorized மண்ணுக்கு மலரஞ்சலி

மண்ணுக்கு மலரஞ்சலி

புதுக்கோட்டை கம்பன் கழகவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக நடந்தேறுவது நாடறிந்த ஒன்று. அவ்வகையில் இது (2024)  49 வது ஆண்டாகும். 
இந்த கம்பன் கழகத்தினர் கம்பன் மற்றும் இராமாயணக் காதை தொடர்புடையகம்பர் பிறந்த தேரழுந்தூர், இராமாயணம் அரங்கேற்றப்பட்ட. ஸ்ரீரங்கம் இராமாயண மண்டபம், கம்பன் முக்தி பெற்ற நாட்டரசன் கோட்டையிலுள்ள கம்பன் சமாதி, இராமபிரான் அவதரித்த அயோத்தி, அவன் நீந்தி விளையாடிய சரயு நதி, சீதாபிராட்டி சிறை வைக்கப்பட்டிருந்த அசோகவனம் (நூவரேலியா – இலங்கை) தனுஷ்கோடி, ஆகிய தலங்களிலிலிருந்து புனித மண்ணை எடுத்து,  கண்ணாடிக் குடுவைகளில் சேகரித்து வைத்து, ஆண்டுதோறும் விழாவின்போது அவற்றிற்கு “மலரஞ்சலி செலுத்துவது வழக்கம். 
 அவ்வகையில் இவ்வாண்டு அந்த இனிய நிகழ்வானது , கம்பன் கழகத்தின் பொருளாளர் “காசியார்” டாக்டர். சி. கோவிந்தராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் கம்பன் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் அனைவரும் புனித மண்ணிற்கு மலரஞ்சலி செய்து வழிபட்டனர்.

Exit mobile version