Home Uncategorized மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா

மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா

மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா! பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்!

துருவச் சுழலால் (Polar Vortex) தூண்டப்படும் பெரிய அளவிலான குளிர்கால புயல்கள், அமெரிக்காவின் சுமார் 30 மாகாணங்களில் அபாயகரமான நிலைமைகளை ஏற்படுத்தி உள்ளன பனிப்புயல்கள், கடும் குளிர் உள்ளிட்டவைகள் நிலவும் என அமெரிக்க தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது

பூமியின் வட துருவத்தை, பொதுவாக ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் துருவச் சுழல் (Polar Vertex), குளிர்காலங்களில் நகர்ந்து விரிவடையும் அவ்வாறு விரிவடைவதால், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களின் சில நாடுகளில் வழக்கத்தை விட மிகக் குறைவான வெப்பநிலையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version