Home Uncategorized மோடியின் குடும்பம்” என்ற கருப்பொருளில் பிரச்சாரம்

மோடியின் குடும்பம்” என்ற கருப்பொருளில் பிரச்சாரம்

காங்கிரஸ் கட்சி எனக்கு குடும்பம் இல்லை என சொல்கிறது

ஆனால் நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் என் குடும்பம் தான் என தெலுங்கானா மாநிலத்தில் நடந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார் சிறுவயதில் நாட்டு மக்களுக்காக வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ஒவ்வொரு நொடியும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்து வருவதாக சொன்னார் பிரதமர்

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ”மோடியின் குடும்பம்” என்ற கருப்பொருளில் பிரச்சாரத்தை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரவர் சமூக வலைதள கணக்குகளில் அவர்களது பெயர்களுடன் தமிழில் ‘மோடியின் குடும்பம்’ என பொருள் படும் ‘மோடி கா பரிவார் என்ற வார்த்தையை சேர்த்து வருகிறார்கள்

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் சவுக்கிதார் மோடி, அதாவது காவலாளி மோடி என்ற கருப்பொருளில் பிரச்சாரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Exit mobile version