Sunday, March 15, 2026
HomeUncategorizedமருதாணியா ? மைக்ரோஸ்கோப்பா?

மருதாணியா ? மைக்ரோஸ்கோப்பா?

பழங்காலத்துல இருந்தே அழகுக்கு, உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியமான… ஒரு தரமான மூலிகை “மருதாணி”.இந்த மருதாணியோட பூர்வீகப் பெயருன்னு பாத்தா, “மருதோன்றி”. இந்த மருதாணியில ஆண்மரம் ; பெண் மரம் அப்படின்னு ரெண்டு வகை உண்டு. ஆண் மருதாணி இலை கொஞ்சம் பெரிய சைஸா இருக்கும். பெண் மருதாணி இலை சின்ன சைஸா இருக்கும்.ஆண் மருதாணிய விட, பெண் மருதாணியோட இலைகள்தான் சிவப்புத்தன்மையை அதிகம் தரக்கூடியது.

மருதாணி இலைகளை பேஸ்ட் போல ரெடி பண்ணி, கைவிரல்கள், உள்ளங்கைகள், கால் விரல்கள் , பாதங்கள், மற்றும் குதிகால்கள் இப்படிப்பட்ட இடங்கள்ல்ல… நாம நினைக்கிற டிசைன்ல வரைஞ்சி, அது கொஞ்சமா காஞ்ச பிறகு, அதுமேல தேங்காயெண்ணையை லேசா அப்ளைப் பண்ணி… அதுமேல சக்கரைத் தண்ணியை லேசா விட்டா…

மருதாணி போடப்பட்ட இடமெல்லாம் நல்லா சிவக்குது. அட … மருதாணி இலைகளை அம்மியில வச்சி அரைச்சி… ஃபாஸ்ட் ஃபுட் காலத்துல ஈஸியா சாத்தியப்படுற விஷயத்தை மட்டும் சொல்லுங்க. அப்படீங்கிறீங்களா? அப்ப உங்களுக்காகவே இருக்கவே இருக்கு…. ”ஹென்னா கோன்” . ஆனா என்ன ஒன்னு… கோன்ல நாம வாங்குற மருதாணி சாந்துல…நிச்சயமா கெமிக்கல் கலந்துருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments