Home உலகம் மெக்சிகோ டோஸ் போகாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

மெக்சிகோ டோஸ் போகாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

மெக்சிகோவின் டோஸ் போகாஸ் (Dos Bocas) பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

பூர்வாங்கத் தகவல்களின்படி, இந்தத் தீ சுத்திகரிப்பு நிலையத்தின் கோக் சேமிப்பு அல்லது கோக்கிங் டவர் பகுதியில் உருவானதாகக் கூறப்படுகிறது.

விண்ணைத் தொடும் அளவுக்குக் கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version