இந்தோனேசியா: தலாவுத் தீவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைக்க கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம். தலாவுத் தீவில் இருந்து மனாடோ நகரை நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை
தாலவுத் தீவுகளிலிருந்து மனாடோ நோக்கிச் சென்று கொண்டிருந்த KM பார்சிலோனா III கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கடற்படை, பகம்லா (Bakamla) மற்றும் SAR (தேடல் மற்றும் மீட்பு) குழுவினரின் மீட்புப் நடவடிக்கைகளின் மூலம் கப்பலில் இருந்த 280 பேர் காப்பாற்றப்பட்டனர்.
துரதிர்ஷ்டவசமாக, மூன்று பயணிகள் தீ விபத்தினால் அல்லாமல், வெளியேற்றும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தனர்.
