Home Uncategorized மத்திய அரசின் விருதுபெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

மத்திய அரசின் விருதுபெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் கண்மணி. இவர்  இதற்குமுன் கன்னியாகுமரி மாவட்ட த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் இருந்தவர். நாகர்கோவில் கீழராமன்புதூர் பகுதியில் இவரது வீடு உள்ளது. இவரது கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார். இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை  அதிகாரிகள் 12 பேர் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்திவந்தாய்ங்க.   

சோதனையில்  அவரது வீட்டில் இருந்த 88 சவரன் தங்க நகைகள், 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம் , வங்கியில் வைப்பு தொகையாக 88 லட்சம் ரூபாயும் , வங்கி முதலீடு 3 லட்சம் ரூபாய் ஆக 1கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.  14 மணிநேரம் நடந்த சோதனை நிறைவு..

Exit mobile version