Home Uncategorized மதுரை ஆதீனமாக பதவி ஏற்று விட்டேன்: நித்யானந்தா அறிவிப்பு

மதுரை ஆதீனமாக பதவி ஏற்று விட்டேன்: நித்யானந்தா அறிவிப்பு

பரபரப்பு செய்திக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத சாமியார் என்றால் அது நித்யானந்தா, அவர் தற்போது, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தன்னை மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். இந்நிலையில் 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளதாகவும் அந்த பதிவுகளில் அவர் தெரிவித்து உள்ளார்.

Exit mobile version