Home Uncategorized மதுரை ஆதினமாக ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம்

மதுரை ஆதினமாக ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம்

மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதியாக, ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அறிவிக்‍கப்பட்டுள்ள. 

மதுரை ஆதினத்தின் 292-வது பீடாதிபதியான குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நேற்றிரவு காலமானார். மதுரை ஆதின மடத்தின் இளைய ஆதினமாக இருந்துவந்த ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதின மடத்தின் 293வது பீடாதிபதியாக அறிவிக்கப்பட்டார். இவர், திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிவ தொண்டாற்றியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் இளைய ஆதினமாக மதுரை ஆதினத்தின் முன்பாக பட்டம் சூட்டப்பட்டு மடத்தின் சாஸ்திர சம்பிரதாயப்படி சடங்குகள் நடத்தப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாடாதிபதிக்‍கு 10 நாட்களுக்‍குப் பின்னர் பட்டம் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Exit mobile version