Home Uncategorized மதுரை – செங்கோட்டை – மதுரை மதிய நேர ரயில்கள் வரும் செப் 30...

மதுரை – செங்கோட்டை – மதுரை மதிய நேர ரயில்கள் வரும் செப் 30 வரை ரத்து

ராஜபாளையம் – சங்கரன் கோவில் பிரிவில்  ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படும். 

தென்காசி –  செங்கோட்டை இடையே மாலை நேர ரயில்கள் ரத்து
 
தென்காசி – செங்கோட்டை இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரை மதுரையிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்படும் மதுரை – செங்கோட்டை விரைவு ரயில் (06665) மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி – செங்கோட்டை விரைவு ரயில் (06657) ஆகியவை தென்காசி – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

Exit mobile version