தமிழ் சினிமாவின், மிகச் சிறந்த, 25 படங்களில், பாலுமகேந்திராவின், மூன்றாம் பிறைக்கு நிச்சயம் இடம் உண்டு. மனமுதிர்ச்சி அடைந்த அப்பாவி இளைஞனுக்கும், குழந்தையாக மாறியிருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பூக்கும் மெல்லிய உறவும், அவள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், இளைஞனின் நிலையும் தான், படம்.
சீனுவாக, கமலும்; விஜியாக, ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். அவர்களுடன் நடித்த, ‘சுப்பிரமணி’ எனும் நாயும் கூட, நம் அன்பை பெற்றிருக்கும். ஊட்டி அருகே உள்ள, கெட்டி எனுமிடத்தில் தான், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பாலுமகேந்திராவின் கேமராவில் மட்டும், ஊட்டி இன்னும் அழகாகத் தெரியும்.சிறந்த நடிகர் விருது, கமலுக்கும்; ஒளிப்பதிவாளர் விருது, பாலுமகேந்திராவிற்கும் கிடைத்தன. ஆனால், சிறந்த நடிகை விருது, ஸ்ரீதேவிக்கு வழக்கப்படவில்லை; இது, பெரும் சர்ச்சையை அப்போது ஏற்படுத்தியது!
