Monday, March 23, 2026
HomeUncategorizedமுதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கையிலிருந்து சிங்களர் ஒருவர் கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கையிலிருந்து சிங்களர் ஒருவர் கடிதம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கையிலிருந்து சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த சிங்களர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரகமுவா மாநிலத்தின் கேகாலை சேர்ந்த 63 வயது சிங்களரான நான் புத்த மதத்தை பின்பற்றுபவன். இந்த கடினமான சூழலில் அரிசி வழங்கியதற்கு உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி.

இதய நோயாளிகளான நானும், என் மனைவியும் 10 கிலோ அரிசி பையை பெற்றுள்ளோம். நாட்டிலுள்ள சூழலால் அன்றாட வருமானத்தை இழந்துள்ளோம். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து உங்களுக்கு மிக்க நன்றி.

இலங்கை மக்கள் மீதான இரக்கத்திற்கு மிகுந்த நன்றி. அன்புடன், விஜிதா விக்கிரமசிரி என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments