தக் லைப் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கூறியிருந்தார். இதையடுத்து கமலுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றன. இந்நிலையில் கமலுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுக்கும் நிலையில் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அமைதியாக இருப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல தமிழையும் முதல்வர் ஸ்டாலின் அவமதிக்கிறார் என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
