Home Uncategorized முதல்வருக்கு டி.ஆர். நன்றி

முதல்வருக்கு டி.ஆர். நன்றி

கோவையில் விடுமுறை நாட்களில் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய  தமிழக முதல்வருக்கு நன்றி என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

கொரோனா பேரிடர் காலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயம்புத்தூரில் மட்டும் இயங்காமல் இருந்த திரையரங்குளை தமிழ் திரைப்படத் துறையினரின் கோரிக்கையை ஏற்று இயக்க அனுமதியளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் திரைத்துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான, இந்த பேரிடர் காலத்தில் ழுழுமையாக ரத்து செய்து திரைத்துறையினருக்கு வளர்ச்சிக்கு உதவிட வேண்டுமாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version