Wednesday, March 11, 2026
HomeUncategorizedமயிலாப்பூரில் பிரதான குழாய்களில் அடைப்பு

மயிலாப்பூரில் பிரதான குழாய்களில் அடைப்பு

மயிலாப்பூரில் உள்ள ரோசரி சர்ச் தெரு, முத்து தெரு, குயில் தோட்டம் ,மல்லி மாநகர் ஜோசப் காலனி உள்ளிட்ட பல பகுதிகள் சாக்கடை நீரால் சூழப்பட்டுள்ளன.

இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இரண்டாயிரம் மக்கள் வாழும் குயில் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தள வீடுகளில் சாக்கடை நீர் புகுந்து விட்டது.

பிரதானக் குழாயில் ஏற்பட்ட  பழுது சரியானால்தான் தீர்வு என்று சொல்லி பழுதை நீக்க
கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகளும் ஊழியர்களும் போராடி வருகின்றனர்.

குயில் தோட்டம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர்
முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாந்தோம் நெடுஞ்சாலையிலை ஓடுகிறது.
டிஜிபி அலுவலகம் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு வெளியேறுகிறது.

பிரச்சினை ஒரு வாரத்திற்கு மேலாக நீடிப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments