திண்டிவனத்தில் இருந்து 15 கிமீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 30 கிமீ தூரத்திலும் உள்ள மயிலம் என்ற சிறு கிராமத்தில் உள்ள ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.
இந்த கோவில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சி அளிக்கிறது.
இங்கு பாலசித்தருக்கு அடுத்து மூலவர் சுப்ரமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் இணைந்து, நின்ற கோலத்தில் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி ஆகியவற்றுடன் காட்சி தருகிறார்.
முருகனின் வாகனமான மயில் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது சிறப்பு…..மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.
மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்சவர்கள் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வருபவர்.
மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருபவர்….. உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். எனவே ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வந்து வணங்கி செல்கிறார்கள்.
இந்த கோவிலில், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடி வெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடப்படுகிறது. பாண்டிச்சேரி விமான நிலையத்தில் இருந்து 30கிமீ தொலைவில் உள்ளது.
திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்கள் இங்கிருந்து முறையே 205கமீ மற்றும் 130கிமீ தொலைவில் அமைந்து உள்ளன.
தெற்கு இரயில்வேயின் சென்னை-திண்டிவனம் முக்கிய இருப்புப்பாதை வழியில் மயிலம் அமைந்துள்ளது.
இந்த புகைவண்டி நிலையம் திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை, இராமேஸ்வரம், பெங்களூரு, வாரனாசி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளுக்கும் திண்டிவனத்திலிருந்து இடைநில்லாப் பேருந்து மற்றும் விரைவுப் பேருந்து வசதிகளும் உள்ளன.
இந்த கோவில் காலை 6 மணி முதல் 12.30மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் முழு நேரமும் திறந்திருக்கும்.

