Monday, April 6, 2026
HomeUncategorizedமயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

ஏற்காடு மலைப்பாதையில் 14 வது கொண்டை ஊசி வளைவில் சென்னையில் இருந்து சுற்றுலா வந்த பேருந்து வளைவில் திரும்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு நல்ல வேலையாக நின்று விட்டது.

இடது பக்க சக்கரம் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு பயணிகள் இறங்க முடியாத அளவில் நின்று விட்டது. வலது பக்க முன்புற சக்கரமும் தடுப்புச் சுவரைத் தாண்டி இருந்தால் மிகப்பெரிய விபத்து நேர்ந்திருக்கும்.

இதில் பயணித்த பயணிகள் அனைவரும் நலமாக பேருந்தின் பின்பக்க கண்ணாடி தடுப்பை உடைத்துக் கொண்டு பத்திரமாக பேருந்தில் இருந்து இறங்கி விட்டார்கள்.

எவ்வளவு அனுபவ சாலி பேருந்து ஓட்டுநர்கள் இருந்தாலும் மலைப்பாதையில் ஓட்டும் அனுபவம் உள்ள ஓட்டுநர்களைக் கொண்டு இது போன்ற மலை பாதை பயணத்தை மேற்கொண்டால் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி சுற்றுலா பயணம் இனிதாகும்.

பயண ஏற்பாட்டாளர்கள் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் மலைப்பாதையில் வாகனம் இயக்க முன் அனுபவம் உள்ளவர்களா என்பதை உறுதி செய்து கொண்டு பயணிப்பது இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க ஏதுவாக இருக்கும்..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments