Home செய்திகள் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மெகா இடம்பெயர்வு… மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா!

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மெகா இடம்பெயர்வு… மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா!

அதிமுகவில் இருந்து முன்னணி நிர்வாகிகள் பலர் திமுக மற்றும் தவெக நோக்கி நகர்ந்து வரும் சூழலில், அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முறைப்படி இணைகின்றனர்.

இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் கார்களுடன் திரண்டுள்ள மாபெரும் ஆதரவாளர் கூட்டத்தால் இந்த இணைப்பு விழா அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்ப காலகட்டங்களில் கட்சி கூட்டங்களுக்கு வரும் மக்களுக்கு முறையான தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதே அரிதாக இருந்த தவெக கூட்டங்களில், தற்போது இந்த மெகா வரலாற்று நிகழ்விற்காக விழா நடைபெறும் அரங்கில் போடப்பட்டுள்ள ஒவ்வொரு இருக்கையிலும் தவெக துண்டு மற்றும் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக பைகளில் ஸ்நாக்ஸ்கள் வைக்கப்பட்டு மிகவும் கார்ப்பரேட் பாணியில் பிரம்மாண்டமாக உபசரிக்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

Exit mobile version