Home செய்திகள் மகளின் திருமணம் ரத்து: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.3 லட்சம் திரும்பப் பெற்ற தந்தை! ஹோட்டலுக்கு...

மகளின் திருமணம் ரத்து: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.3 லட்சம் திரும்பப் பெற்ற தந்தை! ஹோட்டலுக்கு NCDRC அதிரடி உத்தரவு!

தமது மகளின் திருமணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஹோட்டலில் முன்பதிவுக்காக வழங்கிய பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்த விவகாரத்தில், 8 ஆண்டுகால நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) மூலமாகத் தந்தை ஒருவர் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழப்பீட்டுடன் ரீஃபண்டாகப் பெற்று வென்றுள்ளார்.

மகளின் திருமணம் ரத்தான சூழலில், முன்பதிவுத் தொகையைத் திரும்பக் கோரியபோது ஹோட்டல் நிர்வாகம் தர மறுத்துவிட்டதால், பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஹோட்டல் தரப்பில் ரத்து விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்யப்பட்ட போதிலும், சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற முறையில் முன்பணத்தைத் தடுத்து வைத்ததை உறுதி செய்த தேசிய நுகர்வோர் ஆணையம், நுகர்வோரின் உரிமையை நிலைநிறுத்தி பணத்தை வட்டியுடன் திரும்ப வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version