Monday, June 22, 2026
Homeசெய்திகள்மேகதாது விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு: சட்டமன்றத்தில் அமைச்சர் ஆனந்த் விளக்கம்!

மேகதாது விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு: சட்டமன்றத்தில் அமைச்சர் ஆனந்த் விளக்கம்!

கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதை ஒருபோதும் வேடிக்கை பார்க்க முடியாது என்றும், தமிழக விவசாயிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சட்டமன்றத்தில் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பாகத் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானமும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைக் காப்பதில் அரசு உறுதியாக இருக்கும் என்பதை இந்தத் தீர்மானம் காட்டுவதாகவும் அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments