ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகனான 56 வயது மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் 88 மதகுருமார்களைக் கொண்ட ‘நிபுணர்கள் சபை’ (Assembly of Experts) இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானில் தந்தைக்கும் பின் மகன் தலைமைப் பொறுப்புக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோஜ்தபாவின் தேர்வை “ஏற்க முடியாத ஒன்று” என விமர்சித்துள்ளதோடு, ஈரான் நிபந்தனையற்ற சரணடைய வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், புதிய உச்ச தலைவரின் நியமனம் மத்திய கிழக்கில் போர்ச் சூழலை மேலும் தீவிரமாக்கும் எனக் கருதப்படுகிறது.
