Home வானிலை தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிப்பு… சென்னையில் 50:50 மழை வாய்ப்பு!

தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிப்பு… சென்னையில் 50:50 மழை வாய்ப்பு!

பருவமழை குறைந்தழுத்த தாழ்வு நிலை வடநோக்கி நகர்வதால், தீபகற்ப மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மழை தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் ஒரு வெப்பமான நாளாகவே இருக்கப்போகிறது.

இதில் தெற்கு தமிழகம், தீபகற்ப இந்தியாவின் மிக வெப்பமான பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு, தெற்கு தமிழகத்தின் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் சில பகுதிகளிலும், வட கடலோர தமிழகத்திலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய சிறிய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடல் காற்று காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு 50:50 (சம அளவிலான) வாய்ப்புகள் உள்ளன.

Exit mobile version