Home வானிலை தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழல்: வெயில் குறைய வாய்ப்பு!

தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழல்: வெயில் குறைய வாய்ப்பு!

செப்டம்பர் இரண்டாவது வாரத்தை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் வானிலை மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான சூழல் உருவாகி வரும் நிலையில், தென்னிந்திய உள்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த சில தினங்களில் நகரும் ‘கெல்வின் அலை’ (Kelvin Wave), இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலையை உருவாக்கக்கூடும். மேலும், அடுத்த வாரம் மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய சுழற்சி காற்று, காற்று ஒருங்கிணைப்புக்கு சாதகமாக அமையலாம்.

இதன் காரணமாக தமிழகத்தில் மழை நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயிலின் தாக்கமும் அடுத்த சில தினங்களில் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version