Wednesday, March 11, 2026
HomeUncategorizedமதுரை முருகன் மாநாடு - நன்றி தெரிவித்த அண்ணாமலை

மதுரை முருகன் மாநாடு – நன்றி தெரிவித்த அண்ணாமலை

மதுரையில் நேற்று, ஹிந்து முன்னணி பேரியக்கத்தின் ஏற்பாட்டில், அதன் மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முருக பக்தர்கள் மாநாட்டில், மாண்புமிகு ஆந்திர மாநில துணை முதல்வர் திரு பவன் கல்யாண் அவர்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், அனைத்துக் கட்சிகளின் மூத்த தலைவர்கள், ராஷ்ட்ரிய சுயம் சேவா சங்கத்தின் மூத்த தலைவர்கள், உலகெங்கிலும் உள்ள வணக்கத்திற்குரிய துறவிகள், ஞானிகள் மற்றும் மதத் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான முருகப் பெருமான் பக்தர்கள் பங்கேற்றனர். 

ஹிந்து மதத்தின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம், அதனைக் காக்க, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன்னின்று போராடிய ஹிந்து முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் இணையற்ற உயிர்த்தியாகங்களை நினைவு கூறும் வாய்ப்பு கிடைத்தது பெருமை. 
தமிழ்நாட்டில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் உள்ளன. அவை நம் கோவில்களை மையமாகக் கொண்டதால் மட்டுமே காலத்தால் அழியாது நிற்கின்றன, அப்படிப்பட்ட நம் கோவில்களை, இன்று நடைபெறும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 

நேற்றைய முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் அருள் பெறும் பாக்கியம் கிடைத்தது பெருமகிழ்ச்சி. ஆன்மீக பூமியான தமிழகத்தில், சனாதன தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இன்று கூடிய லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments