Skip to main content

கொழுப்பைக் கரைக்கும் காளான்கள்

மனித இனத்தின் ஆதி உணவு வகைகளில் ஒன்று காளான்.  அது விளைபொருட்கள் எதுவும் பயிரிடப்படாத காலம். வேட்டையாடப்பட்ட விலங்குகள், காய், கனிகள் இவற்றிற்கு அடுத்தபடியாக மனிதனின் உணவுப் பட்டியலில் பங்கேற்றது “காளான்”. 

தற்காலத்தில் இது உணவிற்காக பயிரிட்டு மகசூல் செய்யக்கூடிய விளைபொருளாக காளான் விளங்கினாலும், தொன்மையான காலத்தில் இது மனிதன் விளைவிக்கக் கூடியப் பட்டியலில் இல்லை. இயற்கையில் சுயம்புவாக வளர்ந்தன. இயற்கையாக விளைந்த காளான்களை மனித இனம் உணவாக ஏற்றதிலிருந்து இன்று வரை எத்தனையோ பரிணாமங்களைக் கடந்திருக்கிறது. வெள்ளை நிறம் மற்றும் பழுப்பு நிற வண்ணமும், குடைபிடித்த அல்லது தொப்பி அணிந்த ஒரு “பர்பி” பொம்மையைப் போன்ற தோற்றமும் உடைய காளான்கள் சங்க காலத் தமிழில் “ஆம்பி” என்கிற பெயரால் குறிப்பிடப் பட்டுள்ளது. 

 

காளான் வகைகள் : 
பொதுவாக ஒரேமாதிரியான வடிவத்தில் தோற்றமளிக்கும் காளான்கள் ஒரே மாதிரியான தன்மைகள் கொண்டவை அல்ல. தாவரவியல் குடும்ப அடிப்படையில் அதன் உட்பிரிவாக பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் காளான்களானது ”மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்பது போல்” விஷமுள்ளவை – விஷமற்றவை”  என்கிற பாகுபாடு உடையவை. இதனால், காளான்களை சமைத்து உண்பதில் எப்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீட்டுத் தோட்டம், சாலையோரம், பூங்காக்கள், கிராமத் தோப்புகள் மற்றும் நீர்நிலைசார்ந்த இடங்களில் இயற்கையான முறையில் தோன்றும் காளான்கள் அனைத்துமே உண்ணத் தகுந்தவை அல்ல. இவை காளான்களைப் பற்றி நல்ல பரிச்சயமும், ஞானமும் உடைய நல்ல அனுபவசாலிகளைக் கூட ஏமாற்றி விடக்கூடும். 

உணவுக் காளான்:    
உலகெங்கிலும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட காளான் வகைகள் காணப்பட்டாலும், சுமார் 70 வகை மட்டுமே உண்ணக் கூடிய தகுதி வாய்ந்தவை எனக்கூறப்படுகிறது. 
காய்கறி போன்று மென்மைத்தன்மை கொண்ட உணவுக் காளான்களில் வைட்டமின்- டி மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தி கூடுவதற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் விளங்குவதாக கூறப்படுகிறது. காலான் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையது. 

மருத்துவப்பயன்கள்: 
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. உடலுக்கு அவசியமான பொட்டாசியம் சத்து 100 கிராம் காளானில் 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று நோயைக் குணப்படுத்த பயன்படுகிறது. 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
11.    காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

எச்சரிக்கை:  அதிக சத்துக்கள் நிறைந்த காளான் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது. இதனால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.