நாட்டின் முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக (CDS) லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் வரும் மே 30-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, இந்தியாவின் மூன்றாவது சிடிஎஸ்-ஆக இவர் பொறுப்பேற்க உள்ளார்.
1985-இல் கார்வால் ரைஃபில்ஸ் பிரிவில் ராணுவப் பணியைத் தொடங்கிய இவர், ராணுவ துணைத் தளபதி மற்றும் மத்திய பிராந்தியத் தளபதி எனப் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர்.
சுமார் 40 ஆண்டுகால ராணுவ சேவையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக பரம் விசிஷ்ட் சேவா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், இனி ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் செயல்படுவார்.

