கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும், நாக சைதன்யாவும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த கடினமான காலகட்டத்தில் எங்களை ஆதரியுங்கள்.
எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து இதனை எளிதாக கடந்துபோக எங்களுக்கு உதவுங்கள்” என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளா்.

