விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டுவிட்டுதான் என் பயணத்தை தொடங்க முடிவு செய்தேன்.
அதற்கு இதுதான் சரியான இடம் என எனக்கு தோன்றியது எனது கள அரசியல் பயணம் உங்கள் ஆசியுடன் தொடங்குகிறது.
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல; ஏர்போர்ட்டே வரக்கூடாதுனு சொல்லல; இங்கு வரக்கூடாதுனு தான் சொல்றேன் விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்; விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் .
உங்கள் வீட்டில் உள்ள ஒரு மகனாக என்னோட கள அரசியல் பயணம், உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.
தவெக மாநாட்டில் கொள்கையை அறிவித்தோம். இதனை இங்கே சொல்ல காரணம் ஓட்டு அரசியலுக்காக அல்ல.
இந்த பிரச்சினையில் நான் உங்களோடு உறுதியாக நிற்பேன். – பரந்தூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
