நாதன்கோவில் ஶ்ரீ ஜகன்நாத பெருமாள் திருக்கோவில் மஹா சம்ப்ரோக்ஷன பெருவிழா ஏற்பாடுகள் தயார்!!
ஸ்ரீ யப்பதியான எம்பெருமான் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிரும் பொருட்டு அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலித்து வரும் 108 திவ்ய தேசங்களில் 21 வது சலமான ஸ்ரீ வானமாமலை திருமணத்திற்கு அதீதமான ஸ்ரீ நந்திபுரம் என்னும் நாதன் கோயில் ஸ்ரீ செண்பகவல்லி நாயகா சமேத ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருக்கோவில் மகா சாம்ரோக்ஷணம் ஸ்ரீ வானமாமலை மதுரகவி ராமானுஜ ஐயர் சுவாமிகள் பரிபூரண மங்களாசாசனத்துடன் வருகிற புதன்கிழமை மே 24 5 2023 காலை 6 15 மணி முதல் ஏழு முப்பது மணி வரை ரிஷப லக்னத்தில் அஷ்ட பந்தன மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.
இந்த சம்ப்ரோக்ஷன பெருவிழாவிற்கான ஏற்பாட்டினை வானமாமலை மட வழிகாட்டுதலின்படி விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்
