Tuesday, March 17, 2026
HomeUncategorizedநெல்லையப்பர் கோவிலுக்கு வெள்ளித்தேர் தயாராகிறது

நெல்லையப்பர் கோவிலுக்கு வெள்ளித்தேர் தயாராகிறது

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வெள்ளித்தேர் தயாராகிறது பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வெள்ளித்தேர் செய்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வெள்ளித்தேருக்கு முந்தைய நிலையான மரத்திலாலன தேர் செய்யும் பணிகள் இன்னும் இரண்டு வாரத்தில் நிறைவு பெற இருக்கின்றது. இந்த மரத்தேருக்கான

முழு செலவுத் தொகையும்* பிரபல ஜவுளி நிறுவனமான *ஆர்.எம்.கே.வி.* ஏற்று கொண்டுள்ளது. மரத்தேரின் மேல் வெள்ளியை கொண்டு முழுவதுமான வெள்ளித்தேர் தயார் செய்யப்பட உள்ளது. இந்த வெள்ளித் தேருக்கு 450 கிலோ வெள்ளி தேவைப்படுவதாகவும் இதன் உத்தேச மதிப்பு நாலரை கோடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளி தேர் செய்யும் பணிகளுக்கு வெள்ளியையோ அல்லது அதற்கு இணையான பணத்தினையோ திருக்கோயில் நிர்வாகத்திடம் கொடுக்கலாம் எனவும் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments