Home Uncategorized நீ சாதிக்கப் பிறந்தவன் – மு.பழனிவாசன்

நீ சாதிக்கப் பிறந்தவன் – மு.பழனிவாசன்

ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் . அவர் நன்கு படித்த பட்டதாரி. அவருடைய இலட்சியமே தன் வாழ்நாளில் ஒரு விமான ஓட்டியாக வாழவேண்டும் என்பதுதான்.  அதற்காக விண்ணப்பித்து, காத்திருந்தார்.  ஆனால் அவர் தகுதிபெறவில்லை எனக்கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

இதனால் மனம் உடைந்து போன அந்த இளைஞருக்கு வாழ்க்கை கசந்து உலகமே வெறுத்துப்போனது. திக்குத்தெரியாமல் திரிந்தார்.  அப்போது இமயமலைச் சாரலில் உள்ள ரிஷிகேஷில் ஒரு ஆஸ்ரமத்தில் இருந்த துறவியைச் சந்தித்து அந்த இளைஞர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 

அதற்கு அந்த துறவி,”இளைஞனே … காரண காரியங்கள் இல்லாமல் இறைவன் எவரையும் வழிநடத்துவதில்லை. இந்த விமானம் சார்ந்த பணியில் இணையமுடியவில்லையே என வருத்தாதே. நீ இதனைவிட வாழ்வில் வேறு பெரிய சாதனைகள் புரிய முடியும். இனி அதனை நோக்கி முன்னேறு”
என ஊக்கப்படுத்தி ஆசி வழங்கினார். 

அந்த துறவியின் வார்த்தைகளில் ஊக்கம் பெற்று, தனது திறமைகளை மேலும் மெருகேற்றிக்கொண்டு, உலகம் போற்றும் அணுவிஞ்ஞானியாக உருவெடுத்து, தேசத்திற்காக தன்னை அர்ப்பணித்து, விருதுகள் பெற்றார். 

பின்னாளில் பாரத தேசத்தின்  ஜனாதிபதியாக பொறுப்பேற்று பெரும்புகழ் பெற்றார். அவர்தான் தமிழகத்தில் உதித்த டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். 

Exit mobile version