Saturday, March 14, 2026
HomeUncategorized'நீங்க இப்படி இருக்கணும்'.. சென்னை மேயரை சந்தித்த நயன்தாரா..!

‘நீங்க இப்படி இருக்கணும்’.. சென்னை மேயரை சந்தித்த நயன்தாரா..!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பிரபல நடிகை நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட போட்டோ நேற்று முதல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக சார்பில், சென்னை மாநகராட்சியின் 74வது வார்டில் போட்டியிட்டவர் பிரியாராஜன்.. இந்நிலையில், இவரை நடிகை நயன்தாரா நேற்றைய தினம் திடீரென சந்தித்துள்ளார்..

தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் வந்திருந்தார் நயன்தாரா.

அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சி பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசினார்.. மேயராக பதவி ஏற்று கொண்டதற்கு பிரியாவுக்கு, நயன்தாரா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இப்போது ஏற்றுள்ள பதவியில் சிறந்து விளங்க வேண்டும், மற்றவர்களுக்கும் ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று நயன்தாரா பிரியாராஜனிடம் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments