தம்பி பால சரவணன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர் ஏற்கும் எந்தவொரு கதாபாத்திரத்திலும் பிரமாதமாக நடித்து, மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்வார்.
பலரும் மாமன் படத்தில் அவர் காட்சிகள் குறைவாக இருந்தது பற்றி கூறினீர்கள் — அது உண்மைதான். ஆனால் அந்தக் குறுகிய நேரத்திலேயே அவர் அனைவரின் மனதையும் வென்றுவிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நான் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறேன் — தம்பி பாலா தன்னை மீண்டும் மீண்டும் உயர்த்திக்கொண்டு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்போகிறார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பிலும் வெளியிலும் அவர் ஒரு உண்மையான ஆதரவு தூணாக இருந்தார்.
தம்பி, உன்னுடன் இன்னும் பல படங்களில் வேலை செய்ய வேண்டும். நம்முடைய கூட்டணிக்கே இப்போது நான் ரசிகனாகிவிட்டேன். உனக்கு என் அன்பும் நன்றியும் தம்பி.”
