நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அனல் அரசு இயக்கத்தில்,
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா பாக்ஸிங் வீரராக நடிக்கிறார். டீசரில் சூர்யாவின் சண்டை காட்சிகள் மற்றும் பாக்ஸிங் உழைப்பை நன்கு காட்டுகிறது. சூர்யாவுடன் வரலட்சுமி சரத்குமார்,
சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
