Home Uncategorized விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக அதிகரிப்பு!

விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக அதிகரிப்பு!

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் பலமுறை எஸ்.பி.யிடம் விஷ சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்துள்ளார்

கஞ்சா, விஷச்சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது; புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

“கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும்” “உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும்” “விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது; ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்”

“உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” -கள்ளக்குறிச்சியில் ஈ.பி.எஸ். பேட்டி •

Exit mobile version